பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ் (ஐடிஐ மற்றும் ஐடிஐ அல்லாதது).
மொத்த காலியிடங்கள்: 3,979.
தகுதி: (ஐடிஐ பிரிவுக்கு): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
(ஐடிஐ அல்லாத பிரிவுக்கு): குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: ஏஓசிபி/மிஷினிஸ்ட்/பிட்டர்/எலக்ட்ரீசியன்/ டர்னர்/ எலக்ட்ரோபிளேட்டர்/பவுண்டரிமேன்/டூல் மற்றும் டை மேக்கர்/கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்/சிஎன்சி புரோகிராமர்/டிக் மற்றும் மிக் வெல்டர்/ போர்ஜர் மற்றும் ஹீட் டிரிட்டர்/ஏர்கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேசன்/ கம்யூனிகேசன் எக்யூப்மென்ட் மெயின்டனர்/செக்ரட்டரியல் அசிஸ்டென்ட்/மெட்டீரியல் ஹேண்டலிங் மெக்கானிக்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/டெய்லர்
வயது: 03.03.2026 தேதியின்படி ஐடிஐ அல்லாத பிரிவுக்கு 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஐடிஐ பிரிவுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
10ம் வகுப்பு/ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சி தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் ஐடிஐ படித்தவர்களுக்கு ஒரு வருடமும், ஐடிஐ அல்லாத பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் பயிற்சி வழங்கப்படும். உதவித் தொகையாக 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.8,200ம், ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் ரூ.9,600ம் வழங்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.200ம், எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் ரூ.100 மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள காலியிட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளுக்கு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
www.recruit-gov.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.03.2026.
