சென்னை: மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கிய ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அரிட்டாப்பட்டியில் வேதாந்தா நிறுவனம் கனிம சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்த அனுமதியும் வழங்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை போன்று இன்னொரு சுற்றுச்சூழல் சீரழிவுக்கு இடம் அளித்து விடக்கூடாது என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Advertisement


