Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அர்ஜென்டினாவிடம் எகிப்து வீழ்ச்சி: நடுவர்கள் மீது மோஸ்டபா ஜிகோ கடும் சாடல்!

ஃபிஃபா உலகக் கோப்பை சுற்று 16 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கணக்கில் எகிப்து அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. போட்டியின் 67-வது நிமிடம் வரை யாசர் இப்ராஹிம் மற்றும் மோஸ்டபா ஜிகோ ஆகியோரின் கோல்களால் எகிப்து 2-0 என வலுவான முன்னிலையில் இருந்தது. எனினும், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா அணி 13 நிமிட இடைவெளியில் கிறிஸ்டியன் ரொமேரோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோரின் அதிரடி கோல்களால் த்ரில்லர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக, இரண்டாம் பாதியில் ஜிகோ அடித்த மற்றொரு முக்கியமான கோல் VAR பரிசீலனைக்குப் பின் நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய எகிப்து ஃபார்வர்ட் வீரர் மோஸ்டபா ஜிகோ, நடுவர்களின் செயல்பாடு முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருந்தது என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த தொடரே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது என்று வேதனை தெரிவித்த அவர், அர்ஜென்டினாவுக்கு எதிராக எகிப்து வெற்றி பெற நடுவர்கள் அனுமதிக்கவில்லை என்றும், ஒட்டுமொத்த நாட்டின் உழைப்பும் வீணடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ஜிகோ, தாங்கள் எவ்வளவோ முயன்றும் ஆட்டத்தின் முடிவு நடுவர்களின் கைகளிலேயே இருந்ததாகக் குறிப்பிட்டார். வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி ஜூலை 8 அன்று நடக்கும் கால்இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து அல்லது கொலம்பியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.