Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறப்போர் இயக்கம் ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: அறப்போர் இயக்கம் சார்பாக ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. அப்போது அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊழலை ஒழிப்பதற்கும் குறைப்பதற்கும் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுவதோடு, அந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் மிக உறுதியான ஈடுபாடும் அவசியமாகும். அரசு அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாக்க ‘தகவல் தருவோர் பாதுகாப்புச் சட்டத்தை’ (Whistleblowers Protection Act) கொண்டு வர வாக்குறுதி அளிக்க வேண்டும்.

1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான அனைத்து டெண்டர்களுக்கும் மின்னணு டெண்டர் (E-Tenders) முறையைக் கட்டாயமாக்க வேண்டும். மின்னணு டெண்டர் முறையை ஆரம்பம் முதல் முடிவு வரை (End to End) முழுமையாக மின்மயமாக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஊழலற்ற ஆட்சி\ என்று வெறும் வாக்குறுதி மட்டும் அளிக்காமல், அந்த வாக்குறுதியை நனவாக்க தாங்கள் எடுக்கப்போகும் கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகள் (Systemic steps) குறித்தும் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.