Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறியலாம் ஆப்ஸ்

டியர் மீ!

வேகமான வாழ்க்கை முறையில், வேலை, படிப்பு, குடும்பம் என பல பொறுப்புகளுக்கு நடுவே நம்மை நாமே கவனித்துக்கொள்வது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், சுய பராமரிப்பு மற்றும் மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயலிதான் டியர் மீ (Dear Me) செயலி.

இந்தச் செயலி, அன்றாட வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதோடு, நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒரு நாளில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிடுதல், உடலுக்குப் போதுமான தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது, புத்தகம் வாசிப்பது, தியானம் மேற்கொள்வது போன்ற சிறிய இலக்குகளை அமைத்து, அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு ஊக்கமளிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் நேர மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

இந்தச் செயலியின் மற்றொரு முக்கிய அம்சம், பயனர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும். தினசரி மனநிலை மாற்றங்கள், மாதவிடாய் கால மனநிலை மாற்றங்கள் என பதிவு செய்து, அதற்கான ஆலோசனைகள் கொடுத்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

இச்செயலி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் தொழில்முனைவோர் என அனைத்து வயதினருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக, பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்களுக்கு, அன்றாடப் பணிகளை எளிதாக நிர்வகிக்க இது உதவுகிறது. குறிப்பாக வேலை மற்றும் சொந்த குடும்ப பொறுப்புகள் என தடுமாறும் ஆண்- பெண் இருவருக்கும் இது மிகப்பெரும் உதவியாக இருக்கும் செயலி.