Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறியலாம் ஆப்ஸ்

இன்றைய டிஜிட்டல் உலகில், நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், நினைவுகளைப் பகிர்வதற்கும், ஒன்றாக நேரம் செலவிடுவதற்கும் பல செயலிகள் உதவுகின்றன. எத்தனை ஃபில்டர்கள் இருப்பினும், எத்தனை எஃபெக்ட்கள் போட்டுக்கொண்டாலும் உண்மை நட்பில் அதெல்லாம் தேவையில்லை. ஆனால் தொடர்பு அவசியம். அவரவர் வசதிக்கு நட்பை வளர்க்க சில தெரிந்த தெரியாத ஆப்ஸ் இதோ.

வாட்ஸ்அப் (WhatsApp)

குறுஞ்செய்தி, குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு, புகைப்படம் மற்றும் ஆவணங்களை எளிதாகப் பகிர உதவும் மிகவும் பிரபலமான செயலி.

இன்ஸ்டாகிராம் (Instagram)

புகைப்படங்கள், ரீல்ஸ், ஸ்டோரிகள் மூலம் நண்பர்களின் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்து களைப் பரிமாறவும் உதவுகிறது.

ஸ்னாப்சாட் (Snapchat)

தினசரி சிறிய தருணங்களை புகைப் படம் மற்றும் வீடியோ வடிவில் உடனுக்குடன் பகிர விரும்புபவர்களுக்கு ஏற்ற செயலி.

டிஸ்கார்டு (Discord)

ஒரே விருப்பம் கொண்ட நண்பர்கள் குழுவாக இணைந்து உரையாட, குரல் மற்றும் வீடியோ மூலம் பேச உதவும் செயலி.

ஸ்பாட்டிஃபை (Spotify)

ஒன்றாக இசைப் பட்டியலை உருவாக்கி, பிடித்த பாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்து ரசிக்க உதவுகிறது.

கூகுள் போட்டோஸ் (Google Photos)

நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை ஒரே ஆல்பத்தில் சேமித்து, எப்போது வேண்டுமானாலும் பகிரலாம்.

டைம் ட்ரீ (TimeTree)

பிறந்தநாள், சந்திப்பு, சுற்றுலா போன்ற திட்டங்களை நண்பர்களுடன் இணைந்து ஒரே காலண்டரில் நிர்வகிக்க உதவுகிறது.

ஸ்பிளிட்வைஸ் (Splitwise)

சுற்றுலா அல்லது உணவக செலவுகளை நண்பர்களுக்குள் எளிதாகப் பகிர்ந்து கணக்கிட உதவும் செயலி.

பின்ட்ரெஸ்ட் (Pinterest)

பரிசு யோசனைகள், பயணத் திட்டங்கள், அலங்காரக் குறிப்புகள் போன்றவற்றை நண்பர்களுடன் சேமித்து பகிரலாம்.

லாக்கெட் விட்ஜெட் (Locket Widget)

நெருங்கிய நண்பர்கள் நேரடியாக உங்கள் மொபைல் முகப்புத் திரைக்கு புகைப்படங்களை அனுப்பும் தனித்துவமான செயலி.

பீ ரியல் (BeReal)

வடிகட்டப்படாத, இயல்பான வாழ்க்கைத் தருணங்களை நண்பர்களுடன் பகிர ஊக்குவிக்கும் செயலி.

பன்ச் (Bunch)

வீடியோ கால் பேசிக்கொண்டே நண்பர்களுடன் சிறிய ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட உதவுகிறது.

மார்கோ போலோ (Marco Polo)

வீடியோ செய்திகளை பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியை வழங்கும் செயலி.

நோஷன் (Notion)

பயணத் திட்டம், குறிப்புகள், செய்ய வேண்டிய வேலைகள், நினைவுகள் போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.

கிஃப்ட்ஸ்டர் (Giftster)

பிறந்தநாள் மற்றும் நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு நாட்களுக்கான பரிசுப் பட்டியலை உருவாக்கி பகிர உதவும் செயலி.

குறிப்பு: செயலிகள் நட்பை உருவாக்காது. ஆனால், உண்மையான நட்பை காலத்திற்கும் பாதுகாக்கவும், தூரத்தில் இருந்தாலும் மனதளவில் நெருக்கமாக வைத்திருக்கவும்தான் உதவும். எல்லா உறவுகளுக்கும் முயற்சி முக்கியம் பாஸ்.

- ஆ.கவின்