ஆல் ஈவன்ட்ஸ்!
நம் ஊரில் , நம் தெருவில் , ஏன் வீட்டருகில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை எப்படித் தெரிந்துகொள்வது. அதற்குத்தான் உதவுகிறது இந்த ஆல் ஈவன்ட்ஸ் - டிஸ்கவர் ஈவன்ட்ஸ் செயலி ( AllEvents - Discover Events). உங்கள் அருகாமையில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு கூட்டங்கள், ஆரோக்கியம் சார்ந்த கூட்டமைப்புகள், ஷாப்பிங் நிகழ்வுகள், சலுகை விலை ஷோரூம்கள் என அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு செயலியில் பெற்று அதற்கேற்ப உங்களின் ஓய்வு நேரங்களை திட்டமிடலாம். ஏன் புதிய நண்பர்கள் ஒன்றிணைந்து செல்லும் பயணங்கள் குறித்த தகவல்கள் கூட இந்தச் செயலியில் கிடைக்கும். மேலும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்காக டிக்கெட்கள், அல்லது அனுமதி சீட்டுகள் என அனைத்துக்குமான ஓரிடமாக திகழ்கிறது இந்தச் செயலி.
ஆஹா பெருங்காயம்
*பெருங்காயம் சமையல் மணக்க உதவுவது மட்டும் இல்லை. ஆரோக்கியம் மணக்கவும் உதவும்.
* மாதவிலக்கு பிரச்னைகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்கு தண்ணீர் அல்லது மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
*பெருங்காயத்திற்கு உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் திறன் உண்டு.
*மலச்சிக்கலை குணமாக்கும். பெருங்காயம் நீர் நாளங்களில் ஏற்படக் கூடிய புற்றுநோயை தடுக்கும்.
*செரிமானக் கோளாறு, வாய்வுப் பிடிப்பு, மற்றும் வயிற்றுவலி காரணமாக குழந்தைகள் அவதிப்பட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை மோரில் கலந்து கொடுத்தால் குணமாகும்.
*பிரசவித்த பெண்களுக்கு பெருகாயப்பொடி தருவது பண்டைகால வழக்கம். வயிற்றிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கும். அங்காயப் பொடியில் பால் பெருங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- ஆ.ஜெயசீலி ராணி.
