Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அறியலாம் ஆப்ஸ்

மகாபிரசாத்!

பொதுவாக சாதாரண நாட்களில் சமைப்பதற்கும் விசேஷ காலங்களுக்கு சமைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதிலும் நெய்வேத்தியம் மற்றும் பூஜைகளுக்கு பிரசாதங்கள் செய்ய தனி மெனக்கெடல் தேவை. ஆனால் அவசர வாழ்க்கையில் இதெல்லாம் கற்றுக்கொள்ளக் கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதற்குத்தான் முழுமையாக உதவுகிறது மகாபிரசாத் : சாத்விக் ரெசிபிஸ் (Mahaprasad: Satvik Recipes) செயலி.

பூஜை மற்றும் நைவேத்தியத்திற்காக சாத்விக உணவுகளைத் தயாரிக்க உதவும் செயலி.

பூண்டு, வெங்காயம் போன்றவற்றைத் தவிர்த்து சமைக்க விரும்புபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த செயலியில் இந்திய பாரம்பரிய உணவுகள், இனிப்புகள், நைவேத்திய வகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரசாத உணவுகளுக்கான செய்முறைகளை அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் மற்றும் தயாரிக்கும் முறையைப் படிப்படியாகத் தெரிந்து கொண்டு எளிதாகச் சமைக்க முடியும்.

பூஜை நாட்கள், பண்டிகைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்ற உணவு வகைகளைத் தேர்வு செய்யவும் இந்த செயலி உதவுகிறது. வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் பிரசாதம் தயாரிப்பதற்கான யோசனைகளையும் பெறலாம்.

கிருஷ்ணருக்கு படைக்கும் போக உணவுகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கொழுக்கட்டைகள், சுண்டல்கள் என ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்ற பிரசாதம் தொடர்பான சமையல் குறிப்புகள் இதில் பெறலாம், தினசரி வழிபாடு செய்பவர்களுக்கும் ஆன்மிக உணவு முறையைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.