மேஜிக் பின்!
செலவை குறைத்து ஷாப்பிங் செய்ய உதவும் டிஜிட்டல் நண்பன்தான் இந்த மேஜிக் பின் (magicpin) செயலி. இன்றைய காலத்தில் உணவு, ஷாப்பிங், பொழுதுபோக்கு என அன்றாடச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்துவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் உள்ளூர் கடைகள், உணவகங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் சலுகைகளைப் பெற உதவும் செயலியாக மேஜிக் பின் இருக்கிறது.
இந்த செயலியின் மூலம் நமக்கு அருகில் உள்ள உணவகங்கள், கஃபேக்கள், கடைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து, அவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகளைப் பார்க்க முடியும். வெளியே உணவருந்தச் செல்லும்போது, எந்த உணவகத்தில் சிறந்த சலுகை கிடைக்கிறது என்பதைப் பார்த்து தேர்வு செய்வதால் உணவுக்கான செலவைக் குறைக்கலாம்.
உணவை வீட்டிலேயே ஆர்டர் செய்ய விரும்புபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. செயலியில் கிடைக்கும் உணவகங்களைப் பார்த்து, உணவுகளைத் தேர்வு செய்து வீட்டிற்கு வரவழைக்கலாம். குறிப்பிட்ட காலங்களில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளு படிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வழக்கமாக செலவிடும் தொகையைவிட குறைவாக உணவைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கிறது.
ஷாப்பிங் செய்யும்போதும் மேஜிக் பின் பயனுள்ளதாக இருக்கிறது. ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கும்போது கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக அருகிலுள்ள உள்ளூர் கடைகளைக் கண்டறிந்து, அங்கு கிடைக்கும் டிஜிட்டல் சலுகைகளைப் பயன்படுத்துவது சிறிய அளவிலான அன்றாடச் சேமிப்புக்கும் உதவுகிறது.
மேலும், தகுதியான பரிவர்த்தனைகளுக்கு கேஷ்பேக் (Cashback), வெகுமதிப் புள்ளிகள் (Rewards) போன்ற பலன்கள் கிடைக்கும். இவற்றை அடுத்தடுத்த பரிவர்த்தனைகளில் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் சேமிப்பைப் பெற முடியும்.
ஒரே பொருள் அல்லது சேவைக்கு வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பார்த்து தேர்வு செய்யும் வசதியும் இருப்பதால், அவசரமாக வாங்காமல் சற்று ஒப்பிட்டுப் பார்த்து செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்க இது உதவும்.
அதனால், உணவு முதல் ஷாப்பிங் வரை தினசரி வாழ்க்கையில் செய்யும் செலவுகளில் கிடைக்கும் சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மேஜிக் பின் ஒரு பயனுள்ள செயலியாக இருக்கலாம்.


