ப்ராம்ப்ட் பேஸ்!
ப்ராம்ப்ட் பேஸ் ( PromptBase ) செயலி ....என்பது செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான தயாராக இருக்கும் ப்ராம்ப்ட்களைத் தேடவும், பயன்படுத்தவும் உதவும் ஒரு தளமாகும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவை வைத்து எழுத்து, படங்கள், விளம்பரம், வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் போன்ற பணிகளைச் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
நமக்குத் தேவையான பணிக்கேற்ற ப்ராம்ப்ட்டை புதிதாக உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே உருவாக்கப்பட்ட ப்ராம்ப்ட்களைத் தேடி பயன்படுத்த முடியும். இதனால் ஒரு சிறந்த ப்ராம்ப்ட்டை உருவாக்குவதற்காக பலமுறை முயற்சி செய்ய வேண்டிய நேரம் குறைகிறது.
பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்காக உருவாக்கப்பட்ட ப்ராம்ப்ட்களை இங்கு பார்க்கமுடியும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு, குறிப்பிட்ட தோற்றம், கலை வடிவம், புகைப்பட பாணி போன்றவற்றுக்கான விரிவான ப்ராம்ப்ட்கள் கிடைக்கின்றன.
ஒரே பணிக்கு வெவ்வேறு விதமாக உருவாக்கப்பட்ட ப்ராம்ப்ட்களைப் பார்த்து, நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும் முடியும். இதன்மூலம் மற்றவர்கள் செயற்கை நுண்ணறிவிடம் எவ்வாறு கேட்கிறார்கள், என்னென்ன தகவல்களைச் சேர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, நாமும் சிறந்த ப்ராம்ப்ட்களை உருவாக்கக் கற்றுக் கொள்ளலாம்.
புதியவர்களுக்கு இது ஒரு வகையில் கற்றல் கருவியாகவும் பயன்படுகிறது. சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விக்கும், தெளிவாகவும் விரிவாகவும் உருவாக்கப்பட்ட ப்ராம்ப்ட்டுக்கும் செயற்கை நுண்ணறிவு அளிக்கும் பதில்களில் ஏற்படும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
உள்ளடக்கம் உருவாக்கு பவர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், சந்தைப்படுத்தல் பணியில் இருப்பவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் தங்களுடைய பணியை விரைவாகச் செய்ய இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், தாங்கள் உருவாக்கிய சிறந்த ப்ராம்ப்ட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, அதன் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்பும் உள்ளது. அதனால் PromptBase என்பது ப்ராம்ப்ட்களைத் தேடிப் பயன்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல், சிறந்த ப்ராம்ப்ட்களை உருவாக்கக் கற்றுக்கொள்ளவும், பகிரவும் உதவும் தளமாகவும் இருக்கிறது.


