Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அறியலாம் ஆப்ஸ்

லெமன் 8!

பொதுவாகவே எதாவது ஒரு விசேஷம், நிகழ்ச்சி எனக் கிளம்பும் போதுதான் நம்மிடம் உடைகளே இல்லாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நமக்கு உதவும் டிஜிட்டல் அஸிஸ்டெண்ட் தான் ‘‘லெமன் 8 செயலி (lemon 8 App) . புகைப்படங்கள் மற்றும் குறுகிய காணொளிகள் மூலம் ஆடை அலங்காரம், அழகு, உணவு, பயணம், வீட்டு அலங்காரம் உள்ளிட்ட வாழ்க்கைமுறை சார்ந்த தகவல்களைப் பகிரும் செயலி. குறிப்பாக ஆடை அலங்காரம் மற்றும் அழகு தொடர்பான புதிய யோசனைகளைத் தேடுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது.

எந்த நிற ஆடையுடன் எந்த நிறத்தை இணைக்கலாம், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட ஆடையைத் தேர்வு செய்யலாம், சாதாரண உடைகளை எவ்வாறு கிராண்ட் பார்டி உடையாக அணியலாம் போன்ற பல்வேறு யோசனைகளை இதில் காணலாம். அலுவலக உடைகள், பாரம்பரிய உடைகள், விருந்துக்கான ஆடைகள், அன்றாட உடைகள் என வெவ்வேறு வகையான ஆடை அணியும் முறைகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.

மேலும், முக அலங்காரம், சருமப் பராமரிப்பு, தலைமுடி அலங்காரம், நக அலங்காரம் போன்ற அழகு சார்ந்த விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொள்ளலாம். பிடித்தமான தோற்றம் அல்லது ஆடை அலங்கார முறையைப் பார்த்து, அதற்கு இணையான புதிய யோசனைகளையும் தேடிப் பெற முடியும்.

பிடித்தமான பதிவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. திருமணம், பயணம், அலுவலக நிகழ்ச்சி அல்லது விருந்து போன்ற நிகழ்வுகளுக்குத் தேவையான ஆடை மற்றும் அழகு சார்ந்த யோசனைகளை முன்கூட்டியே சேமித்துத் திட்டமிடலாம்.

தங்களுடைய ஆடை அணியும் முறைகள், அழகு குறிப்புகள் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த உள்ளடக்கங்களைப் பகிர விரும்புபவர்களுக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும். அழகான புகைப் படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் தங்களுக்கென ஒரு பார்வையாளர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

மொத்தத்தில், “என்ன அணியலாம், எப்படி அணியலாம், எந்த நிறத்துடன் எந்த நிறத்தைச் சேர்க்கலாம்?” என்பதற்கான காட்சி வழி யோசனைகளைத் தேடுபவர்களுக்கு லெமன்8 ஒரு பயனுள்ள செயலியாக இருக்கிறது.