மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உடுமலைப்பேட்டையை அடுத்த அமராவதி நகரில் ஒரு பள்ளி உள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப்பள்ளியாக இப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுதும் புதிதாக 19 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மூன்று பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரே ஒரு சைனிக் பள்ளி உள்ள நிலையில் மத்திய அரசு புதிதாக ஒரு பள்ளிக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, நாமக்கல் குடியிருப்பு எஸ்.பி.கே., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, சைனிக் பள்ளியாக மாற உள்ளது.
