Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இஸ்ரோவில் 410 பேருக்கு அப்ரன்டிஸ்

டிப்ளமோ/ பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 220 இடங்கள்.

(பாடவாரியாக காலியிடங்கள் விவரம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்-40, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்-83, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-50, கெமிக்கல் இன்ஜினியரிங்-15, இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்-10, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்-2, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்-10, ஏராஸ்பேஸ் இன்ஜினியரிங்-10)

உதவித்தொகை: ரூ.12,500.

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 120 இடங்கள்.

(பாடவாரியாக காலியிடங்கள் விவரம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்-30, எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்-38, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-30, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-10, சிவில் இன்ஜினியரிங்-5, இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி-5, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்-2)

உதவித்தொகை: ரூ.10,900.

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. டிப்ளமோ இன் கமர்ஷியல் பிராக்டீஸ்: 70 இடங்கள்.

உதவித் தொகை: ரூ.10,900.

தகுதி: கமர்ஷியல் பிராக்டீஸ் பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். மேற்குறிப்பிட்ட அனைத்து பயிற்சிகளுக்கும் 2022ம் ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் www.web.umang.gov.in/Landing என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2026.