போக்குவரத்து கழகங்கள் வாரியாக இடங்கள் விவரம்
1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்:
(இன்ஜினியரிங்): 438 இடங்கள்.
உதவித் தொகை: ரூ.12,300. போக்குவரத்து கழகங்கள் வாரியாக இடங்கள் விவரம்:
1. விழுப்புரம்: 40 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-10, சிவில்-4, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-11, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி- 15.
2. கும்பகோணம்: 123 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-123.
3. சேலம்: 45 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்- 45.
4. மதுரை: 51 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-48, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்-3.
5. நெல்லை: 26 இடங்கள். மெக்கானிக்கல்-22, சிவில்-4.
6. எம்டிசி- ெசன்னை: 138 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-80, சிவில்-10, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்-10, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி-38.
7. எஸ்இடிசி- தமிழ்நாடு: 68 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-60, சிவில்-2, எலக்ட்ரிக்கல்-6
2. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது). (பிஏ/பிஎஸ்சி/பி.காம்/பிபிஏ/பிபிஎம்/பிசிஏ) 623 இடங்கள்.
உதவித் தொகை: ரூ.12,300.
தகுதி: கிராஜூவேட் அப்ரன்டிஸ் இன்ஜினியரிங் பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முழு நேர பி.இ.,/பி.டெக்., பட்டமும், கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங் அல்லாத) பயிற்சிக்கு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டமும், டிப்ளமோ அப்ரன்டிஸ் பயிற்சிக்கு 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2022, 2023, 2024, 2025, 2026ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
டிப்ளமோ படிப்பு அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த இணையதளத்தில் வழங்கப்படும் ‘யூனிக் என்ரோல்மென்ட் நம்பரை’ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘டாப் டவுன் பட்டனை’ கிளிக் செய்து அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விழுப்புரம்-100, கும்பகோணம்-251, மதுரை-37, நெல்லை-93, சென்னை-62, எஸ்இடிசி-80.
3. டிப்ளமோ அப்ரன்டிஸ் (டெக்னீசியன் அப்ரன்டிஸ்). 457 இடங்கள்.
உதவித் தொகை: ரூ.10,900. போக்குவரத்து கழகங்கள் வாரியாக இடங்கள் விவரம்;
i) விழுப்புரம்: 100 இடங்கள். (மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்-40, சிவில்-10, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-20, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி-30).
ii) கும்பகோணம்: 51 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-51.
iii) சேலம்: 48 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-45, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-3
iv) மதுரை: 20 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-18, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-2.
v) ெநல்லை: 70 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-66, சிவில்-4.
vi) சென்னை: 100 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-80, சிவில்-10, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்்ஸ்-10.
vii) எஸ்இடிசி- 68 இடங்கள். மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்-60, சிவில்-2, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-6.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2026.



