Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்

அ. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: கெமிக்கல் இன்ஜினியரிங்-14, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-5, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-1.

ஆ. டெக்னிக்கல் அப்ரன்டிஸ்: கெமிக்கல் இன்ஜினியரிங்-14, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-4, சிவில் இன்ஜினியரிங்-1, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்-1.

1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங்): 20 இடங்கள். தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: (டிப்ளமோ): 20 இடங்கள். தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் போது கிராஜூவேட் அப்ரன்டிசுக்கு மாதம் ரூ.12,500ம், டிப்ளமோ அப்ரன்டிசுக்கு மாதம் ரூ.10,900ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

பி.இ.,/டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு இ.மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பத்தை www.ddpdoo.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி: தி சீப் ஜெனரல் மேனேஜர், கார்டைட் பேக்டரி, அருவங்காடு, நீலகிரி மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.04.2026.