1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 25 இடங்கள்.
அ. பிஎஸ்சி (உயிரியல்/வேதியியல்/இயற்பியல்/கணிதம்/கம்ப்யூட்டர் சயின்ஸ்): 21 இடங்கள்.
ஆ. பி. பார்மா: 2 இடங்கள்.
இ. பிஎல்ஐஎஸ்சி (லைபரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ்)
உதவித் தொகை: மாதம் ரூ.12,300.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்கள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. டிப்ளமோ அப்ரன்டிஸ்: 9 இடங்கள்.
அ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி: 2 இடங்கள்.
ஆ. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி: 3 இடங்கள்.
இ. மாடர்ன் ஆபீசர் பிராக்டீஸ் (ஆங்கிலம்/இந்தி)/ஆபீஸ் மேனேஜ்மென்ட்: 3 இடங்கள்.
ஈ. லைப்ரரி மற்றும் இ்ன்பர்மேஷன் சயின்ஸ்: 1 இடம்.
உதவித் தொகை: மாதம் ரூ.10,900.
தகுதி: சம்பந்தப்்பட்ட பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. ஐடிஐ அப்ரன்டிஸ்: 4 இடங்கள்.
அ. எலக்ட்ரிக்கல்- 1 இடம்.
ஆ. எலக்ட்ரானிக்ஸ்- 1 இடம்.
இ. மெக்கானிக்கல்- 1 இடம்.
ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ்- 1 இடம்.
உதவித் தொகை: ரூ. மாதம் ரூ.9,600.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: 30.04.2026 தேதியின்படி 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மூன்று அப்ரன்டிஸ் பிரிவுகளுக்கும் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 2022ம் ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.
www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாக கல்வி தொடர்பான விவரங்களை பதிவு செய்து விட்டு, பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள drdo-inmas என்ற நிறுவனத்தின் ‘லிங்க்கை’ கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (30.04.2026.)



