பி.இ.,/பிஎஸ்சி.,பி.காம்.,படித்தவர்களுக்கு வாய்ப்பு
I. பயிற்சி: கிராஜூவேட் அப்ரன்டிஸ். 28 இடங்கள்.
துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 7 இடங்கள்.
2. எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்
இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்டஸ்ட்ரியல்
இன்ஜினியரிங்: 6 இடங்கள்.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் தகுதி: பி.இ.,/பி.டெக்.,
3. கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி: 3 இடங்கள்.
4. கெமிக்கல் இன்ஜினியரிங்/கெமிஸ்ட்ரி: 4 இடங்கள்.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் தகுதி: பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி.,
5. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்: 4 இடங்கள். தகுதி: பி.இ.,/பி.டெக்.,
6. டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்: 1 இடம். தகுதி: பி.இ.,/பி.டெக்.,
7. நூலக அறிவியல்: 1 இடம்.தகுதி: பி.லிப்.,/பி.எல்ஐ.எஸ்சி.,
8. இயற்பியல்: 1 இடம். தகுதி: பிஎஸ்சி.,
9. அக்கவுன்ட்ஸ்: 1 இடம். தகுதி: பி.காம்.,
உதவித்தொகை: ரூ.12,300.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் பிரிவுகளுக்கு பி.இ.,/பி.டெக்., பட்டமும், இதர பிரிவுகளுக்கு அதற்குரிய இளநிலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பயிற்சிகளுக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வயது வரம்பு 20.05.2026 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களுடைய கல்வித்தகுதியை பதிவு செய்து விட்டு, பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ நிறுவன ‘லிங்க்கை’ கிளிக் செய்து, அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்பவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (20.05.2026).
II. ஜூனியர் ரிசர்ச் பெல்லோ:
i) எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்: 4 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் நெட்/கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) இயற்பியல்: இயற்பியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் நெட்/கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) கம்ப்யூட்டர் சயின்ஸ்: 2 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் நெட்/கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 1 இடம். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் நெட்/கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (20.05.2026).


