பட்டப்படிப்பு தகுதி
I. ஸ்டேட் வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பட்டதாரிகளுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி: அப்ரன்டிஸ்ஷிப். மொத்த காலியிடங்கள்: 7150. தமிழ்நாட்டிற்கு 396 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உதவித் தொகை: மாதம் ரூ.15,000. வயது: 01.04.2026 தேதியின்படி 20 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதொவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், திருப்பூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், தேனி, ராமநாதபுரம், ராணிபேட்டை, சிவகங்கை ஆகிய மையங்களில் ஜூலை 2026ல் நடைபெறும்.
www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026.
II. பஞ்சாப், சிந்து வங்கி
பயிற்சி: அப்ரன்டிஸ்ஷிப். மொத்த காலியிடங்கள்: 635. உதவித் தொகை மாதம் ரூ.12,300. வயது: 01.05.2026 தேதியின்படி 20 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்்பெண்கள், நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.punjabandsind.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2026.


