Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தமுமுக புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை, அக்.28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிவிப்பு:

கோவையில் நடந்த தலைமைப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமுமுக தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ஜெ.ஹாஜாகனியும், பொருளாளராக பொறியாளர் என்.ஷபியுல்லாஹ் கானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். துணைத் தலைவராக பி.எஸ்.ஹமீது, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள்-குணங்குடி ஆர்.எம்.அனிபா, முஜீபுர் ரஹ்மான் உமரி, துணைப் பொதுச் செயலாளர்கள்- மைதீன் சேட் கான், சலிமுல்லாஹ்கான், ஏஜாஸ் அகமது, மாநிலச் செயலாளர்கள்- சிவகாசி முஸ்தபா, ஓசூர் அல்தாப், குனிசை எம்.எஸ்.ஹமீது, விழுப்புரம் முஸ்தாக்தீன், தைக்கால் முபாரக், மதுரை சேக் இப்ராஹீம், மர்யம் நிஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.