நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!!
Advertisement
இதில், ஒரே சமூகத்தினரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது, ஒரே வழக்கறிஞர் சங்கத்தை சார்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுடன், தலைமை நீதிபதி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன், வழக்கறிஞர் பால் கனகராஜ், வழக்கறிஞர் பார்வேந்தன், மில்டன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement