க்ளோஅப் செயலி!
க்ளோஅப் செயலி (GlowUp - Face Score, Skincare) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இணைந்த மெக்கப், மற்றும் பியூட்டி கைடு. க்ளோஅப் செயலி ஒவ்வொரு சருமத்தையும் தனித்தன்மையுடன் புரிந்து கொள்கிறது. ஆலோசனைகள், டிப்ஸ்கள் கொடுப்பதற்கு முன்பு பயனர் முகத்தை கேமரா மூலம் ஸ்கேன் செய்து, அந்த முகத்தின் தோல் நிறம், வடிவம், கண் அமைப்பு போன்ற அம்சங்களை ஆராய் கிறது. அதன்பின் அதற்கேற்ற மேக் அப் ஸ்டைல், கலர் டோன், லிப் ஷேட், பவுண்டேஷன் டோன் போன்றவற்றை பரிந்துரைக்கிறது. இதனால், ஒருவரின் முக அமைப்புக்கு உண்மையில் பொருந்தும் அழகு குறிப்புகள், ஆலோசனைகள் மட்டுமே இந்த செயலி கொடுக்கும்.
இந்த செயலியின் மற்றொரு சிறப்பம்சம் “மெய்நிகர் மேக் அப் முயற்சி” (Virtual Try-On). இதில் உங்கள் முகத்தில் நேரடியாக லிப் கலர், ஐ ஷேடோ, ப்ளஷ் போன்றவற்றை மெய்நிகரில் (அதாவது வீடியோ கேமராவில் முகம் காண்பித்து அதில் மேக்கப் லுக்) பரிசோதிக்க முடியும். எந்த நிறம் அல்லது ஸ்டைல் உங்களுக்கு பொருந்துகிறது என்பதை காஸ்மெட்டிக் வாங்கும் முன்பே தெரிந்து கொள்ளலாம். இது பணத்தை வீணாக்காமல் சரியான பொருளை தேர்வு செய்ய உதவுகிறது. மேலும், மேக் அப் செய்வதில் அனுபவமில்லாதவர்களுக்கும் இதிலுள்ள “Step-by-Step Tutorials” பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.