சென்னை: சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைப்பதற்கான ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அசோக் நகரில் 22 மாடி அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைக்க ரூ.33 லட்சத்தில் டெண்டர் கோரப்பட்டது. ரூ.33 லட்சம் மதிப்புள்ள டெண்டரை சமர்ப்பிக்க ஆக.15 முதல் ஆக.20 வரை 5 நாட்கள் மட்டுமே அவகாசம் என புகார் எழுந்தது.
டெண்டரை சமர்ப்பிக்க 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சர்ச்சையானது. டெண்டரை சமர்ப்பிக்க குறைந்த நாள் அவகாசம் வழங்குவது ஊழலுக்கு வழிவகுக்கும் என புகார் எழுந்தது. டெண்டரை சமர்ப்பிக்க குறைந்த நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.



