Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் பைக் திருடியவர் கைது

மாதவரம்: புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் வசித்து வருபவர் மணிபாலன்(45). இவர் கடந்த ஏப்ரல் 27ம் தேதி தனது வீட்டின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை அவரது வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேசின்பிரிட்ஜ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், மணிபாலன் குடியிருக்கும் அதே கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜெயராஜ் (எ) ஜெபஸ்டின்(19) என்ற நபர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதைடுத்து நேற்று முன்தினம் ஜெபஸ்டினை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.