Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தீபாவளி பரிசு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சார்பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவது இருக்கக்கூடிய சார்பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை இன்று மாலை முதலே திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, தீபாவளி பண்டிகை வரக்கூடிய நிலையில் பரிசு பொருட்கள் ஏதேனும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்வதற்காக ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்பு துறையால் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும்.

அரசு அலுவலகங்களை குறிவைத்து இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த சோதனையனது சென்னையை பொறுத்தவரை அசோக் நகர், அண்ணா நகர், குன்றத்தூர், பம்மல், பெரியமேடு, சைதாப்பேட்டை, நீலாங்கரை உட்பட தமிழகத்தில் சில பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனையின் நிறைவு பெற்ற பின்பு எங்கெங்கு சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்தும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் பற்றிய விரிவானாக தகவல் வெளியிடப்படும் என்று லஞ்ச ஒழிப்பு துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.