Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு நீல பட்டை குறியீடு கட்டாயம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனின் அதிகரித்து வரும் சவாலை அரசு அறிந்திருக்கிறது. இதை சமாளிக்கத் பல உத்திசார்ந்த மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை எளிதில் அடையாளம் காணவும், அவற்றின் விவேகமான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவற்றுக்கு நீலப் பட்டை குறியிடுவதற்காக மருந்து விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிவிக்கை ஜனவரியில் வெளியிடப்பட்டது.

நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் மீதான தேசிய செயல் திட்டம் 2.0-இன் கீழ், மனித, விலங்கு, உணவு மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் முழுவதும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து நுகர்வுக்கான கண்காணிப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம், சுகாதார அமைப்புகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் சரியாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது,என்றார்.