Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விடைத்தாள் திருத்த வழிகாட்டு நெறிகள்: தேர்வுத்துறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2, மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 28ம் தேதி வரை நடந்தது. அதற்கான விடைத்தாள்கள் திருத்துவதற்காக தமிழகத்தில் 80 மையங்கள் அமைத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள் திருத்தப்படுகின்றனர். இந்நிலையில் மார்ச் 28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி முடிந்தன. அதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ மாணவியர் தாங்கள் எழுதிய விடைகளுக்கு உரிய மதிப்பெண் வழங்கவில்லை என்று தெரிவித்து புகார்கூறினர். அது போன்ற நிலை இந்த ஆண்டில் வரக்கூடாது என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது.

அதில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விடைத்தாளில் மாணவர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு விடைகளையும் கவனமாக படித்துப் பார்த்து அதன்பிறகே உரிய மதிப்பெண் வழங்க வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ மதிப்பெண் வழங்கக் கூடாது. மேலும் மதிப்பெண்களை கூட்டி மொத்த மதிப்பெண் குறிப்பிடும் போதும் கவனமாக கூட்டல் செய்ய வேண்டும். வினாவாரி, பக்கவாரி மதிப்பெண் முதல் பக்கத்தில் எடுத்து எழுதும் போதும் கவனமாக எழுதி மொத்த மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும். அதில் தவறு ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.