அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் ஸ்டிரைக் தமிழக அரசு சுமுக தீர்வு காண பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை: அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு சுமுக தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களை தமிழக அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Advertisement