Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மும்பை மருத்துவமனையில் அன்னா ஹசாரே அனுமதி

மும்பை: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தெரியவந்ததைத் தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 89 வயதான ஹசாரே, அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரத்தப் பரிசோதனையில் சிறுநீரகத் தொற்று இருப்பது தெரியவந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்தார்.