Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திராவில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியை ரம்பத்தால் அறுத்த சைக்கோவின் வலது கால் அகற்றம்

திருமலை: ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ராப்தாடு அரசு மாவட்ட உயர்நிலை பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து காதலை ஏற்காத மாணவியை ரம்பத்தால் அறுத்த ஹேமந்த்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடந்ததை வீடியோ பதிவாக மேற்கொண்டபோது, போலீசாரிடம் இருந்து ஹேமந்த் தப்பிச்செல்ல முயன்றார்.

அப்போது துப்பாக்கி சூடு நடத்தியதில், படுகாயமடைந்த ஹேமந்த்தை சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வலது காலில் துப்பாக்கி சூட்டில் நரம்புகள் அறுந்து ரத்த ஓட்டம் நின்றதால் அவரது வலது கால் நேற்று அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

படுகாயமடைந்த 15 வயது மாணவிக்கு பெங்களூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக மேம்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் எலும்பியல் குழுக்களின் பரிசோதனையைத் தொடர்ந்து, மாணவி வெற்றிகரமாக வென்டிலேட்டர் உதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சீராக உள்ளார். கண் விழித்து உரிய பதிலளிக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.