சென்னை: ஆந்திராவில் படகு கவிழ்ந்து உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மோகன், முருகன், விஜயகாந்த் ஆகியோர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
+
Advertisement


