திருமலை: ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா பக்கிங்காம் பேட்டையை சேர்ந்த பத்மாவதி, குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மெருகு நாகார்ஜூனாவுடன் எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் தனது துறை தொடர்பான ஒப்பந்த பணிகளை தருவதாக கூறியும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் என்னிடம் பெற்றுக் கொண்டார்.
ஆனால் எனக்கு எந்த ஒப்பந்தப் பணியும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த பணிக்காக அவரிடம் செல்லும்போது என்னை 4 முறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது நான் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியவில்லை. பணத்தை தரும்படி கூறினால் தரவில்லை. விசாகப்பட்டினத்தில் இருப்பதாக கூறி வந்தனர்.
தற்போது ‘விசாகப்பட்டினத்தை சேர்ந்த மலைவாழ்மக்கள் நலத்துறை டீச்சர் கங்கா பவானி என்பவரை இதேபோன்று பணம் கேட்டதால் சாகடித்து விட்டோம். அதேபோன்று உன்னையும் கொன்று விடுவோம்’ என்று உதவியாளர் முரளி மோகன் மிரட்டுகிறார். முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண் என்னை காப்பாற்றி எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மாஜி அமைச்சர் மீது பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.


