சத்தியம் பண்ணி ஓட்டுக்கு துட்டு வாங்கினீங்க... எனக்கு வாக்களிக்காதவங்க பணத்த திரும்ப கொடுக்கல மாரியம்மன் சும்மா விடமாட்டார்...:ஆந்திர தேர்தலில் தோற்ற வேட்பாளரின் வீடியோ
திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 32-வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர் பிரசாத்ரெட்டி. நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனசேனா வேட்பாளர் புலா சைதன்யா வெற்றிபெற்றார். முன்னதாக பிரசாத் ரெட்டி, தான் வெற்றிபெறுவதற்காக ரூ.10 வட்டிக்கு பல லட்சம் கடன் வாங்கிவந்து வாக்காளர்களுக்கு அவர் வீடு தேடி சென்று சத்தியம் பெற்று விநியோகித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தோல்வியடைந்துள்ள நிலையில் அவர் கடும் வேதனையில் உள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு வாக்களிக்காதவர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது:
தேர்தல் செலவுக்காக ரூ.10 வட்டிக்கு கடன் வாங்கி ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு தேடிச்சென்று பணம் கொடுத்தேன். இருப்பினும் நான் தோல்வியடைந்துள்ளேன். எனவே எனக்கு வாக்களிக்காதவர்கள் தயவு செய்து எனது பணத்தை திருப்பித்தர வேண்டும். மாரியம்மன் மீது சாட்சியாக எனக்ேக வாக்களிப்பதாக சத்தியம் செய்து பலர் பணம் வாங்கினர். ஆனால் 400 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்துள்ளேன். எனவே அந்த 400 பேரும் எனது பணத்தை திரும்ப தரவேண்டும்.
என்னை ஏமாற்றினால் மாரியம்மா சும்மா விடமாட்டார். நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை குறைந்தபட்சம் என் பணத்தையாவது திருப்பிக்கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். வாக்களிக்க பணம் கொடுப்பதே அல்லது வாங்குவதோ குற்றம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சாித்துள்ளது. ஆனால் இதனை அறியாத தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவரின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


