Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திராவில் மொத்தமுள்ள 13 மாநகராட்சிகளில் 12ஐ கைப்பற்றிய என்டிஏ: ஒரு இடத்தில் ஒய்.எஸ்.ஆர். காங். வெற்றி

திருமலை: ஆந்திராவில் மொத்தமுள்ள 13 மாநகராட்சிகளில் 12ஐ என்டிஏ கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஒரே ஒரு மாநகராட்சியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்றது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாநிலத்தில் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட மொத்தம் 13 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 12 மாநகராட்சிகளை ஆளும் என்டிஏ கூட்டணி கைப்பற்றியது. ஆனால் அனந்தபுரம் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடும் போட்டி நிலவிய வாக்கு எண்ணிக்கையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரமேஷ் கவுட், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த பாஜக வேட்பாளரை விட 5,981 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

‘செல்வாக்கு குறையல’ ஆர்.கே.ரோஜா பேட்டி

சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ஆர்.கே.ரோஜாவின் சொந்த தொகுதி என்பதால் ஆளும் என்.டி.ஏ. கூட்டணி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டது. இருப்பினும் 36 வார்டுகளில் 4 வார்டுகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. இதுகுறித்து ரோஜா நேற்று அளித்த பேட்டி: ஆளுங்கட்சியின் ரவுடித்தனம் மற்றும் கண்மூடித்தனமான அச்சுறுத்தலை மீறி எங்கள் கட்சி 4 இடங்களை பிடித்துள்ளது. 3 கட்சிகளின் கூட்டணியை எங்களின் கட்சி எதிர்கொண்டு வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆட்சி மாறினாலும் எங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கு தொடர்கிறது. வரும் 2029 தேர்தலில் இதுபோன்ற அராஜக அரசியலுக்கு மக்கள் சரியான பாடம் தருவார்கள். இவ்வாறு கூறினார்.