சுற்றுச்சூழல் அனுமதி குறித்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து அன்புமணி வரவேற்பு
Advertisement
மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கூட்டம் மீண்டும் நடைபெற்றாலும் கூட, அதில் முல்லைப் பெரியாறு அணை குறித்து எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. இன்று நடைபெறவிருந்த வல்லுனர் குழு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த முல்லைப்பெரியாறு புதிய அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நீக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வல்லுனர் குழு கூட்டத்தில் இதை விவாதிக்க தடை பெறுவது தான் முழுமையானத் தீர்வாக இருக்கும்.
Advertisement