பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் பிரிவு தரப்பில் மனு தாக்கல்..!!
டெல்லி: பா.ம.க கட்சி தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் பிரிவு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. தலைமை தொடர்பான உட்கட்சி மோதலில், கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் அன்புமணி தரப்புக்கே உள்ளது என்று தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாகச் சாடியுள்ளது. பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்றும், வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவரே தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாசை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது” ராமதாஸ் தரப்பு மனு டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

