புதுடெல்லி: டெல்லியில் பாஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும், ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டு, நாட்டில் அராஜக மாடலை முன்வைக்கின்றனர். ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் கூறிக் கொள்கிறேன், அராஜகத்தைத் தூண்டுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
ராகுல் காந்தியின் இந்த அராஜக மாடலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்கள் உங்கள் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவார்கள். எதிர்க்கட்சி வரிசையில் மாற்றத்தை அவர்கள் உருவாக்கி விடுவார்கள். ஆட்சியை மாற்ற விரும்புபவர்கள், மக்கள் மத்தியில் ‘எதிர்க்கட்சிகள் பொறுப்பற்றவை, அவற்றை மாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் உருவாவதையே காண நேரிடும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


