அழகிய கூந்தலுக்கு ஆம்லா எண்ணெய்!
தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்னைக்கும் தீர்வு தரும் நெல்லிக்காய் எண்ணெய். நெல்லிக்காய் எண்ணெயை முடிக்கு தடவினால் பொடுகுத் தொல்லை முதல் முடிஉதிர்தல் வரையிலான பிரச்னைகள் குறையும்.நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும். ஆம்லாவில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. வைட்டமின் சி முடி வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து.முடி இடுப்புக்குக் கீழ் நீளமாக இருக்க விரும்பினால், இதற்கு ஆம்லாவைப் பயன்படுத்தலாம். நம் பாட்டி எப்போதும் கூந்தலுக்கு எண்ணெய் தடவச் சொல்வார்கள். எண்ணெய் தடவுவதன் மூலம் முடி வலுவாகவும், நீளமாகவும் மாறும். நெல்லிக்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது நல்லது. வீட்டிலேயே நெல்லிக்காய் எண்ணெயை எளிதாக தயாரிக்கலாம். நெல்லிக்காய் எண்ணெயை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.
ஆம்லா எண்ணெயை வீட்டீல் தயாரிக்கும் முறை
அரை கிலோ நெல்லிக்காயை நல்லா கழுவி அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நெல்லிக்காய் அரைத்த சாற்றை சேர்க்கவும். அதில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காய்ச்சவும். நீங்கள் பல வழிகளில் ஆம்லா எண்ணெய் செய்யலாம். நெல்லிக்காயை உலர்த்தி பொடி செய்து கொண்டு, ஆலிவ் எண்ணெயில் கலந்து, நீண்ட கூந்தலுக்கு இந்த எண்ணெய் தலைக்கு தடவலாம். (கடைகளில் நெல்லி பொடி வாங்கலாம்)
ஆம்லா எண்ணெய் பொடுகு பிரச்னையை குறைக்கும்.
குளிர்காலத்தில் பொடுகு பிரச்னை மிகவும் பொதுவானது. சிலருக்கு எப்போதும் தலைமுடியில் பொடுகு இருக்கும். பொடுகு பிரச்னையில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் தலைமுடிக்கு ஆம்லா எண்ணெயை பயன்படுத்த வேண்டும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆம்லாவில் காணப்படுகின்றன. இது உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் பொடுகு மற்றும் அரிப்பு பிரச்னையை தடுக்கிறது.பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்கும். உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் பொடுகுத் தொல்லை முதல் பூஞ்சை தொற்று வரை பிரச்னைகள் ஏற்படலாம். உச்சந்தலையை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஆம்லா எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆம்லா எண்ணெயைக் கொண்டு தினமும் உச்சந்தலையில் மசாஜ் செய்வது பலனளிக்கும்.
ஆம்லா எண்ணெய் முடியை பலப்படுத்தும்
முடி வலுவாக இல்லாவிட்டால் அது எளிதில் உடையும். எனவே முடியை வலுவாக வைத்திருப்பது அவசியம். வலுவான கூந்தலுக்கு விலையுயர்ந்த ஷாம்பூவை பயன்படுத்த வேண்டியதில்லை. நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.
வெள்ளை முடி பிரச்னையை குறைக்கும்
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கூட தலைமுடி நரைக்க ஆரம்பித்து விட்டது. உடலில் மெலனின் குறைபாடு மற்றும் ரசாயன முடி சிகிச்சை ஆகியவை முடி நரைப்பதற்கான காரணங்கள். நெல்லிக்காய் எண்ணெய் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும். ஆம்லாவில் இருப்புச் சத்து உள்ளதால் இது முடியை கருப்பாக்க உதவுகிறது. எனவே முடிக்கு சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆம்லா எண்ணெயை பயன்படுத்துங்கள்.
முடி உதிர்தல் பிரச்னையை குறைக்கும்
வெந்நீரில் தலையை அலசினால் முடி உதிர் செய்யும். முடியை சரியாக பராமரிக்காதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. முடி உதிர்தல் பிரச்னையை குறைக்க நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
முடி பராமரிப்பு குறிப்புகள்
முடி வளர்ச்சிக்கு முடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது முடியை சரியாக கழுவ வேண்டும். முடிக்கு எண்ணெய் தடவ வேண்டும். உங்கள் தலைமுடியில் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள். முடியில் ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இவை முடியை சேதப்படுத்தும். இது முடி வளர்ச்சியை நிறுத்துகிறது.
- பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.