தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்பை குறைக்க 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா திட்டம்

புதுடெல்லி: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.

Advertisement

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவின் கடுமையான வரிகளை தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள 50 நாடுகளை குறிவைப்பது உட்பட இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு அதிகாரி,‘‘ இந்த 50 நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளன. ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மை உள்ளிட்ட நான்கு விஷயங்களில் வர்த்தக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே 20 நாடுகளில் கவனம் செலுத்தி வந்தது. இப்போது மேலும் 30 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்றார். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 35.14 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் வர்த்தக பற்றாக்குறை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 18.78 பில்லியன் டாலர்களாக குறைந்தது.2025-26 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில், ஏற்றுமதி 1.92 சதவீதம் அதிகரித்து 112.17 பில்லியன் டாலர்களாகவும்,இறக்குமதி 4.24 சதவீதம் அதிகரித்து 179.44 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.

Advertisement