அமெரிக்காவில் புதிய மசோதா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: கவலை தெரிவித்த இந்தியா
Advertisement
அதற்கு ஜெய்சங்கர், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகமும், அதிகாரிகளும் செனட்டர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளனர். எரிசக்தி பாதுகாப்பில் எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் எந்தவொரு முன்னேற்றமும் இந்தியாவின் நலனை பாதிக்கும் எனில் உரிய சமயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் ’’ என்றார்.
Advertisement