அமெரிக்காவில் சில தொழில்களில் திறமையானவர்கள் இல்லாததால் உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை ஈர்ப்பது அவசியம்: அதிபர் டிரம்ப் கருத்து
நியூயார்க்: அமெரிக்காவில் சில தொழில்களில் திறமையானவர்கள் இல்லாததால் உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அழைத்து வர வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘‘அமெரிக்காவில் சிக்கலான, பல உயர் தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறமையான பணியாளர்கள் இல்லை. மக்கள் அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் சில தொழில்களில் திறமையானவர்கள் இல்லாததால் உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை ஈர்ப்பது அவசியமாகும். வேலையின்மை கோட்டில் இருந்து மக்களை நீங்கள் விலக்க முடியாது. நான் உங்களை ஒரு தொழிற்சாலையில் சேர்க்கப் போகிறேன். நாம் ஏவுகணைகளை உருவாக்கப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
