அமெரிக்காவில் 6 வருஷமாக லாட்டரியில் ஒரே எண்ணை வாங்கிய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி: இப்போ கோடிக்கு அதிபதி!!
வாஷிங்டன்: 6 வருஷமாக லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணுக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அமெரிக்காவின் கரோலினா மகாணத்தில் ஹோப் மில்ஸ் நகரைச் சேர்ந்த பெண் பார்பரா மன்ஃபோர்ட். லாட்டரி வாங்குவதில் ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் என்றைக்காவது ஒருநாள் பரிசு அடித்துவிட வேண்டும் என்றும் தன் தங்கையிடம் பேசி வந்தாராம். அப்போது அவரது தங்கை ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அதாவது அடிக்கிறதோ இல்லையோ தொடர்ந்து நீ ஒரே நம்பரில் லாட்டரி வாங்கு அக்கா என கூறியுள்ளார். தங்கையில் ஐடியா இவருக்கு பிடித்து போயுள்ளது. இதனால் கடந்த 6 வருஷமாக லாட்டரியில் ஒரே எண்ணையே வாங்கி வந்துள்ளார். 6 வருஷம் ஆகிவிட்டு என்பதற்காக இவர் அந்த ஐடியாவே மாற்றவில்லை. தொடர்ந்து அதே எண்ணில் வாங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் இரு தினங்களுக்கு முன்பு அவர் தனது டிக்கெட் எண்ணை சரிபார்த்துள்ளார். அப்போது அந்த எண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி பரிசு அடித்துள்ளது தெரியவந்தது. இதனால் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்ற அவர் துள்ளி குதித்துள்ளார். கடவுளே என்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தன் தங்கையிடமும் இதுபற்றி கூறியிருக்கிறார். ஹோப் மில்ஸ் நகரில் உள்ள லக்கி ஸ்டாப் கடையில் லெஜியன் சாலையில் தான் அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். நேற்று தனது பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டார். வரி பிடித்தம் போக மீதி உள்ள $110,616 அதாவது, இந்திய மதிப்பில் 97 லட்சம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.