Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அம்பானி வீட்டுத் திருமணத்தில் மயிலாப்பூர் பில்டர் காஃபி!

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமணம் என்றால் அது கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணம்தான். ஆம், முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மூன்று நாட்கள் ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் இருக்கிற பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அம்பானி வீட்டுக் கடைசி திருமணம் என்பதால் 5 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அசத்தலாக நடைபெற்று இருக்கிறது. இதனால் இந்தத் திருமணம்தான் இப்போது உலகம் முழுவதுமே வைரல் நியூஸ். சாதாரணமாக நடக்கும் நமது வீட்டுத் திருமணங்களில் சைவம், அசைவம் என இருபதுக்கும் மேலான உணவுகள் இருக்கும். அம்பானி வீட்டுக் கல்யாணத்தில் என்ன மாதிரியான உணவுகள் இருந்திருக்கும் என யோசித்தபடி இருக்கிறார்கள் உணவு விரும்பிகள்.இந்தத் திருமணத்திற்கு உலக அளவில் இருக்கிற பெரும்பாலான உணவுகளைத் தேர்ந்தெடுத்து மொத்தம் 2500 வகையான உணவுகளை விருந்தினர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த உணவு மெனுவை தயாரிப்பதற்காகவே உலக அளவில் நம்பர் ஒன்னாக இருக்கும் ரெஸ்டாரன்டில் இருந்து பல செஃப்கள் வரவழைக்கப்பட்டு ஒரு பெரிய மெனுவை உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக, உலகறிந்த செஃப் அவினாஷ் மார்ட்டின்ஸ் மற்றும் வெர்ஜிலியோ மார்ட்டினஸ் இருவர் தலைமையில் இந்தத் திருமண விருந்து தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டார் ஹோட்டல் உணவுகளில் இருந்து, மிதக்கும் கப்பலில் கிடைக்கும் உணவுகள் வரை அனைத்துமே இந்த மெனுவில் அடக்கம். போர்த்துக்கீசிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாரம்பரிய கோவா உணவுகள் பலவுமே இந்த மெனுவில் இடம் பிடித்திருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தேசிய உணவுகள், பாரம்பரிய உணவுகள் என ஒவ்வொன்றையும் தேடித்தேடி கண்டுபிடித்து அந்த உணவுகளைப் பரிமாறி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், காஃபியில் மட்டுமே நூற்றுக்கும் மேலான காஃபிகள் சுவைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தமிழ்நாட்டில் இருந்து கும்பகோணம் டிகிரி காஃபி, மயிலாப்பூர் பில்டர் காஃபி, மெட்ராஸ் பில்டர் காஃபி என நமது ஊரில் இருந்தும் சில காஃபிகள் அம்பானி வீட்டுத் திருமணத்தில் பேஷ் பேஷ் என சுவைக்கப்பட்டு இருக்கிறது.