*சிதம்பரம் டிஎஸ்பி விசாரணை
புவனகிரி : பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இறால் குட்டை தண்ணீர் விவசாய நிலங்களில் கலந்ததாகவும், அதனால் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.மேலும் இதைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும் விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி பிரதீப் பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது விவசாயிகளிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து இறால் குட்டை தண்ணீர் கலந்ததாக கூறப்படும் நிலத்தின் மண்ணை எடுத்து பரிசோதனை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.அதன்படி விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய உள்ளனர். அதனால் போராட்டம் எதுவும் நடத்த மாட்டோம் என டிஎஸ்பியிடம் உறுதி அளித்தனர்.
