கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை
Advertisement
இந்த புகாரை நடிகர் நிவின் பாலி மறுத்தார். பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் கேரளாவில் ஒரு சினிமா படப்பிடிப்பில் நிவின் பாலி இருந்ததாக அந்த படத்தின் டைரக்டரான வினீத் னிவாசன் கூறினார். இதற்கிடையே தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் சதித்திட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி கேரள முதல்வர், டிஜிபிக்கு நிவின் பாலி புகார் கொடுத்தார். இதற்கிடையே நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் இன்று கொச்சியில் விசாரணை நடத்தியது. அப்போது, துபாயில் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் தான் கேரளாவில் இருந்ததற்கான ஆவணங்களை போலீசிடம் தாக்கல் செய்தார்.
Advertisement