சென்னை: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்திரா காந்தியின் உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. கிராம கமிட்டி மூலம் வாக்கு வாங்கி எங்களுக்கு மேலும் அதிகரிக்கும். எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசு சார்பில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, ராபர்ட் புரூஸ் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், ராணி, துணைத் தலைவர்கள் உ.பலராமன், சொர்ணா சேதுராமன், விஜயன், இமயா கக்கன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, ஆர்டிஐ அணி மாநில துணை தலைவர் மயிலை தரணி, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், ஜெ.டில்லிபாபு, மற்றும் நிர்வாகிகள் டி.அய்யம்பெரும்மாள், எஸ்.எம்.குமார், டி.என்.அசோகன், மன்சூர் அலிகான், பா.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
