மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜோசப் ஜாய் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவ.19க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
+
Advertisement
