திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த சசிகுமார்(43) பயணித்தார். பயணத்தின் போது சசிகுமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நடுவானிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி விமானத்திலேயே சசிகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement


