புதுடெல்லி: கடந்த 4ம் தேதி ஏர் இந்தியாவின் ஏஐ2379 விமானம் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒடிசா வான்வெளியில் பறந்தபோது, விமானம் திடீரென நடுவானில் 300 அடி கீழே இறங்கி பெரும் குலுக்கலுக்கு உள்ளானது.
பாதிப்பு: இந்த திடீர் குலுக்கலால் விமானத்தில் இருந்த 24 பேர் (20 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள்) காயமடைந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறக்கப்பட்ட பிறகு, விதிகளின்படி விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை (screening) நடத்தப்பட்டது.
முதல் கட்ட தலைமை விமானிக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனையிலேயே சந்தேகம் எழுந்தது. அதன் பின்னர் அவரது மாதிரிகள் தீவிர ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தற்போதைய இறுதி அறிக்கையில் அவர் கஞ்சா புகைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.



