பணி: அக்னிவீர் (அக்னிவீர் வாயு இன்டேக் 01/2027).
சம்பளம்: முதல் வருடம் ரூ.30,000. 2ம் வருடம் ரூ.33,000. 3ம் வருடம் ரூ.36,500. 4ம் வருடம் ரூ.40,000. வயது வரம்பு: 17 வயது முதல் 21க்குள் இருக்க வேண்டும். 1.1.2006க்கும், 1.7.2009க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள்/பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி: கணிதம் அல்லது கணிதம் மற்றும் இயற்பியலை பாடமாகக் கொண்ட தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: 1. ஆண்கள் மற்றும் பெண்கள் 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு ஆண்களுக்கு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலமும் 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
உடற்திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடித்தல், பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடித்தல் ஆகிய போட்டிகளும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்அப், சிட்அப், ஸ்குவாட் பயிற்சிகளை செய்தல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு மார்ச் 30, மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் நடைபெறும்.
கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.iafrecruitment.edcil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.02.2026.

