தாம்பரம்: 93வது ஆண்டு விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் “செக்கோன் இந்தியா விமானப்படை மாரத்தான்” நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதில் 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், அனைத்து வயது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். 787 விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், சகோதரி சேவைகள், துணை ராணுவ படைகளை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள் பங்கேற்பாளர்களுக்கு உத்வேகத்தையும் அளித்தனர்.
இந்திய விமானப்படையின் பரம்வீர் சக்ரா விருது பெற்ற அதிகாரி நிர்மல்ஜித் சிங் சேகோனுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், உடல்நலம், ஒழுக்கம் மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றின் செய்தியை பரப்புவதற்கு இந்த மாரத்தான் பரவலான பாராட்டைப்பெற்றது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
